குடிநீர் விநியோகத் திட்டத்தை தனியார்வசம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு : வலுவான போராட்டம் நடத்த சி.பி.எம்., முடிவு

கோவை : குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என கோவை மாநகராட்சியைக் கண்டித்து மக்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்த சி.பி.எம்., மாவட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


கோவை : குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என கோவை மாநகராட்சியைக் கண்டித்து மக்களை திரட்டி வலுவான போராட்டம் நடத்த சி.பி.எம்., மாவட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் காந்திபுரத்தில் உள்ள மாவட்டக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வேலுசாமி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி. இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மநாபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர். நடராஜன் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இம்மாவட்டக்குழு கூட்டத் தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் வி. இராமமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில், குடிநீரை விநியோகிப்பது மற்றும் பராமரிப்பது ஆகியவற்றை பிரஞ்ச் நிறுவனமான 'சூயிஸ்' நிறுவனத்திடம் கோவை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. தற்போது, இதற்கான ஆரம்ப கட்ட வேலையை சூயிஸ் கார்ப்ரேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. உயிரினங்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரை வணிகமயமாக்கும் முடிவை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. 

இந்நிலையில், தனியாரின் பராமரிப்பில் தண்ணீரை விடும் மாநகராட்சியின் இம்முடிவு கோவை மக்களை பெரும் துயரத்தில் தள்ளிவிடும். ஆகவே, உடனடியாக கோவை மாநகராட்சி சூயிஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து, தண்ணீரை வணிமயமாக்கும் முடிவைக் கைவிட வேண்டும். மேலும், இதுகுறித்து முதற்கட்டமாக வரும் 28-ம் தேதி கோவை மாநகராட்சி ஆணையரைச் சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்களைத் திரட்டி வலுமிக்க போராட்டத்தை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு முடிவெடுத்துள்ளது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடிநீர் விநியோகத் திட்டம் தனியார்மயமாக்கல் குறித்த அச்சத்தை போக்கும் வகையில், கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பிரத்யேக விளக்கம்

கிளிக் செய்யவும்

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...