பியூஷ் மானுஷுக்கு ஜாமீன்: மன்சூருக்கு மீண்டும் சிறை

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 10,000 கோடி மதிப்பில் சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சாலை அமைக்க சென்னை முதல் சேலம் வரையில் 30 மீட்டர் அகலத்திற்கு, மொத்தம் சுமார் 2,200 ஹெக்டே அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்யும் போது, சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள சுமார் 40,000 வீடுகள், கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இடிக்கப்படும். இதற்கு ஏராளமான விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், சென்னை - சேலம் வரையில் 8 வழி பசுமை வழிச்சாலைக்கு எதிராக சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் போராட்டம் நடத்தினர். இதனால், அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்கள் சார்பில் சேலம் மாவட்டம் ஓமலூர் கிளை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுவதால் பியூஷ் மானுஷ், மன்சூர் அலிகான் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதே சமயம், நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...