ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனை: வேளாண்மை பல்கலை., அறிவிப்பு

கோவை: பயறு வகை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தனி அலுவலர் (விதைகள்) அறிவித்துள்ளார்.

கோவை: பயறு வகை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் விற்பனைக்கு - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தனி அலுவலர் (விதைகள்) அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி நிலையங்களான பயறுவகை துறை, கோயமுத்தூர், தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையம், வம்பன் மற்றும் விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள ஐந்து வேளாண்மை அறிவியல் நிலையங்களில் மத்திய அரசின் நிதியுதவியுடன் ‘விதை நடுவம்’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆராய்ச்சி நிலையங்களில் பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப்பயறு மற்றும் துவரை பயிர்களில் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, குறிப்பாக, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்ட உளுந்து பயிரின் புதிய ரகங்களான, கோ.6, வம்பன் 6, வம்பன் 8, எம்டியு 1, கேகேஎம் 1, பாசிப்பயரில் கோ.7, கோ.8, துவரையில் கோ.ஆர்.ஜp.7 மற்றும் எல்.ஆர்.ஜ.p 41 ஆகிய ரகங்களில்; விதை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் அனைவரும் தங்களுக்குத் தேவையான விதைகளைப் பெற்று பயன்பெற தனிஅலுவலர் (விதைகள்), விதை மையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர், தொலைபேசி 0422-6611232, 6611432, 9489056719 மற்றும் 9489347928 மின்னஞ்சல் [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...