பிரதமருக்கு நெருக்கமானவர் கோவை பிளாட்பாரத்தில் உயிரிழந்தார்

கோவை: முன்னாள் பிரதமருடன் இந்தியா முழுக்க நடைபயணம் மேற்கொண்ட கோவையை சேர்ந்த முதியவர் கேட்பாரின்றி பிளாட்பாரத்தில் உயிரிழந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



கோவை: முன்னாள் பிரதமருடன் இந்தியா முழுக்க நடைபயணம் மேற்கொண்ட கோவையை சேர்ந்த முதியவர் கேட்பாரின்றி பிளாட்பாரத்தில் உயிரிழந்த சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலிராஜன் (75). ஜனதா தளத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் கடந்த 1982-ம் ஆண்டு அன்றைய பிரதமர் சந்திரசேகருடன் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை நடைபயணம் மேற்கொண்டார்.



குறைகள்

மக்களின் குறைகளை கேட்டறியும் பொருட்டு நடத்தப்பட்ட இந்த மூன்று மாத நடைபயணத்தில் பல மாநிலங்களுக்குச் சென்று மக்களின் அத்தியாவசிய தேவைகளையும் பிரச்சனைகளையும் கேட்டறிந்தார்.



இவருக்கு காமராஜர் மீது ஈடுபாடு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக குனியமுத்தூர் பகுதியில் காமராஜர் தேசிய மன்றத்தை தொடங்கினார். திருமணம் செய்து கொள்ளாத சங்கிலிராஜன் தனது எலக்ட்ரீசியன் பணியோடு, மன்ற பணிகளையும் கவனித்துக் கொண்டு, காமராஜரின் கொள்கைகளை பரப்பி வந்தார்.

மன்றமே வீடு

உடன் பிறந்தவர்கள் இருந்த போதும், அந்த காமராஜர் மன்றமே இவரது வீடாக இருந்தது. தினமும் மன்றத்தின் மாடியிலேயே படுத்து உறங்கி வந்த இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. முதுமை காரணமாக மாடிப்படி ஏறமுடியாத சூழலும் ஏற்படவே, அருகில் உள்ள பிளாட்பாரத்தில் படுத்துறங்க தொடங்கினார் சங்கிலிராஜன்.

இப்படி ஒரு மனிதர் இருப்பது சிம்ப்ளிசிட்டி செய்தி குழுவுக்கு தெரியவந்தது.



அவருக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு செய்தி வெளியிட இன்று புறப்பட்டோம். அவரது மன்றத்தின் அருகே வெகுஜனங்கள் கூடியிருக்க, சங்கிலிராஜன் குறித்து விசாரிக்க, அங்கு கூடிருந்த மக்கள் அதிர்ச்சி கொடுத்தனர். மேலும், அங்கு சென்று பார்த்த போது அந்த மனிதர் பிளாட்பாரத்தில் உயிரின்றி கிடந்தார்.

கண்கள் கலங்க வெளியேறிய போது, மக்கள் கூட்டம் அவரது பெருமையை பறைசாற்றிக் கொண்டிருந்தது காதுகளின் ஓரம் வந்து விழுந்தது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...