புதிய தகவல்களை வெளியிட்டது பனாமா பேப்பர்ஸ்

சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையை உருவாக்கிய பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தையும், பனாமா நாட்டில் இருக்கும் மொசாக் ஃபோன்சக்கா நிறுவனத்தைப் பற்றியும் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டது.

சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையை உருவாக்கிய பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தையும், பனாமா நாட்டில் இருக்கும் மொசாக் ஃபோன்சக்கா நிறுவனத்தைப் பற்றியும் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டது.

பனாமா பேப்பர்ஸ் பற்றிய தகவல்கள் உலக அரங்கில் வெளிப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பின்பு, மீண்டும் பெரிய பிரச்சனையாக உருவாகி இருக்கின்றது. புதிய தகவல்களில் எத்தனை இந்தியர்கள் கணக்கில் காட்டாத சொத்துகளை வெளிநாடுகளில் இருக்கும் தொழில்துறையில் முதலீடாகவும், பணமாகவும் பெற்றிருக்கின்றார்கள் என்பதை வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

புதிதாக வெளியிடப்பட்ட பனாமா பேப்பரில் பார்சிலோனாவின் மெஸ்ஸியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அர்ஜெண்டினா குழுவிற்கு தலைமை ஏற்று ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றார் மெஸ்ஸி. இவர் மீதும் இவருடைய தந்தை மீதும் ஏற்கனவே வருமான வரி ஏய்ப்பு விசாரணை ஸ்பெயினில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார் மெஸ்ஸி.

இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை தொடர்பாக எஸ்.கே. பஜோரியா நிறுவனத்தின் தலைவர் ஷிஷிர் பஜோரியாவிடம் பேசிய இரண்டாவது நாளிலே பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க முயற்சி செய்துள்ளார்.

கடந்த 2016-ல் வெளியிடப்பட்ட அறிக்கையின் முடிவுப்படி,

நடத்தப்பட்ட சர்வதேச விசாரணைகள் - 150

சர்ச்சையில் சிக்கிக் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை - 426

இதுவரை இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட சோதனைகள் - 58

இதுவரை இந்தியாவில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் - 16

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் காட்டப்படாத பண மதிப்பு - ரூ. 1088 கோடி

புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் பனாமா பேப்பர்களில் புதிதாக 1.2 மில்லியன் ஃபைல்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் மொஸாக் ஃபோன்செக்கா நிறுவனம் மற்றும் இதர நிதி நிறுவனங்களுக்கும் இடையேயான வர்த்தக ரீதியான உறவினையும் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 2016-ல் பனாமா தொடர்பான தகவல்கள் வெளிவருவதற்கு முன்பு, மொஸாக் ஃபோன்செக்கா நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்கள் பலருக்கும் மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்திருக்கின்றது.

பி.வி.ஆர்., சினிமாவின் நிறுவனரான அஜய் பிஜ்லி மற்றும் அவருடைய மனைவியின் செலீனா மற்றும் மகன் ஆமெர் ஆகியோருடைய பெயர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...