கோவை அருகே 22,000 லிட்டர் போலி சமையல் எண்ணெய் பறிமுதல்

கோவை: அன்னூரில் பிரபல எண்ணெய் நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 22,000 லிட்டர் சமையல் எண்ணையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: அன்னூரில் பிரபல எண்ணெய் நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 22,000 லிட்டர் சமையல் எண்ணையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் மானாவாரி விவசாய பயிர்கள் அதிகம் என்பதால் அங்கு நிலக்கடலை, தேங்காய் ஆகியவற்றை கொள்முதல் செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், அங்கு சில போலி எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுவதாகவும். அதில் பிரபல எண்ணெய் நிறுவனங்கள் பெயரில் சட்டவிரோதமாக கலப்பட எண்ணெய்யை தயாரித்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக காரணம்பேட்டையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரில் இருந்த சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளை ஆய்வு செய்தனர். அதில் அனைத்தும் கலப்பட எண்ணெய் என்பதும், அன்னூரில் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. 



இதனையடுத்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று அன்னூர் காவல் நிலையம் பின்புறம் உள்ள முத்துக்குமார் என்பவரது சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.

ஆனால், அந்நிறுவனம் பூட்டப்பட்டிருந்ததால் காவல்துறை உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட கலப்பட சமையல் எண்ணெய் சுமார் 22,000 லிட்டர் அளவுடைய பாக்கெட்டுகளை கண்டுபிடித்தனர். 

மேலும், ஆலையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அந்த கலப்பட எண்ணெய் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த கோவைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்துள்ள அன்னூர் போலீசார் ஆலை உரிமையாளரான முத்துக்குமார் என்பவரை தேடி வருகின்றனர். 

முத்துக்குமார் அன்னூர் கரியாக்கவுண்டனூர் என்ற கிராமத்தை சார்ந்தவர் என்பதும் பல ஆண்டுகளாக இந்த கலப்பட சமையல் எண்ணெய் நிறுவனத்தை நடத்தி வருவதும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய்யின் மதிப்பு ரூ.25 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...