நீலகிரியில் 10 வயதான ஆண் புலி உயிரிழந்தது

நீலகிரி: காலில் காயங்களுடன் கூடலூர் வந்த பத்து வயது மதிக்கத்தக்க புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.



நீலகிரி: காலில் காயங்களுடன் கூடலூர் வந்த பத்து வயது மதிக்கத்தக்க புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாடந்துறை, கடிசனகொல்லி வனப்பகுதியில் இன்று காலை வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் புலி இறந்து கிடப்பதை பார்த்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு கூடலூர் வன அலுவலர் ராகுல் தலைமையில் அதிகாரிகள் சென்று இறந்த புலியின் உடலை ஆய்வு செய்தனர்.



அப்போது புலியின் கால்களில் காயம் இருந்தது. இந்த நிலையில் இறந்த புலியின் உடலை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கூடலூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். சம்பவம் நடந்த இடம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ளதால், அங்கிருந்து இந்த புலி வந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கலாம் என்றும், புலியின் பிரேத பரிசோதனை நாளை காலை நடைபெறும் என்றும் அதன் பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...