தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 3 நாட்களில் 800 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த 3 நாள்களில் 800 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கடந்த 3 நாள்களில் 800 மெட்ரிக் டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த மாதம் 28-ம் தேதி மூடி சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் கந்தக அமில கசிவுகள் ஏற்பட்டது. இதனை ஆய்வு செய்ய தூத்துக்குடி உதவி ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தலைமையில் டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் நடைபெற்றன. 

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசுகையில், "கந்தக அமிலத்தை அகற்றும் பணிகளில் 40 டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், குறைந்த அளவிலான டேங்கர் லாரிகளே உள்ளதால் இப்பணிகள் இன்னும் 2 தினங்கள் நீடிக்கும்," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...