இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் 2-ம் கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கோவை: இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் 2-ம் கட்ட குற்றப்பத்திரிகையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

கோவை: இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் 2-ம் கட்ட குற்றப்பத்திரிகையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.



கோவை மாநகர் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர், கோவை சுப்பிரமணிய பாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதின்று இரவு 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் என்னும் 4 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். 

இதில், 2016-ம் ஆண்டு அப்துல் ஹகீம் என்பவர் கிருஷ்ணராஜ் காலணி பகுதியில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குபழியாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

இதனிடையே, சசிகுமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு துறையினர் பல்வேறு விசாரணைகளை நடத்தினர். இதில், கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அபுதாகிர், சுபேர் ஆகியோரின் இல்லங்களில் 3 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையானது சாய்பாபா காலனி, உக்கடம் ஆகிய பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ., அதிகாரிகள் சசிகுமார் கொலை வழக்கில், முதற்கட்டமாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இன்று 2-ம் கட்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். இதில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்கள் என்றும், இவர்கள் தமிழகத்தில் தீவிரவாதத்தைத் தூண்டும் நோக்கிலும், மக்கள் மத்தியில் பீதியை கிளப்பும் வகையிலும் செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...