மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனா..? அல்லது பொய். ராதாகிருஷ்ணனா எனச் சந்தேகம் : முத்தரசன் விமர்சனம்

கோவை: தமிழக மக்களிடம் தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வரும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனா..? அல்லது பொய். ராதாகிருஷ்ணனா..? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

கோவை: தமிழக மக்களிடம் தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்பி வரும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனா..? அல்லது பொய். ராதாகிருஷ்ணனா..? என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். 

கோவை ஜீவா இல்லத்தில் சி.பி.ஐ., மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- கோவை மாநகராட்சிக்கு குடிநீர் விநியோக ஒப்பந்தத்தைத் தனியார் (சூயஸ்) நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதை சி.பி.ஐ., வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். கோவை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 29-ம் தேதி மாநில துணைச் செயலாளர் சுப்பராயன் தலைமையில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது. 

சேலம் - சென்னை பசுமை வழிச் சாலை திட்டம் தேவையற்றது. வளர்ச்சி என தமிழக அரசு கூறுவது ஏற்படையதல்ல. திட்டத்தை நிறைவேற்றியே தீர்வோம் என முதலமைச்சர் அடம்பிடிக்கிறார். சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், வளர்மிதி உள்ளிட்டோரை கைது செய்தது கண்டனத்திற்குரியது. 

கருத்து கூறினால் சமூக விரோதிகள் எனக் கூறினால், நாங்களும் சமூக விரோதிகள்தான். மாநில அரசின் எட்டு வழிச் சாலையை கண்டித்து ஜுலை 4-ம் தேதி சேலத்தில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. 

தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பி வரும் நிலையில், அரசு கைது நடவடிக்கை மூலம் அரசு பதற்றத்தை உருவாக்கி வருகிறது. ஆளுநர் மூலமாக மத்திய அரசு தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு அடக்குமுறைகள் மத்திய அரசின் உத்தரவின்பேரில், மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு ஆதரவாகவே மாநில அரசு செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். அதுவும் மத்திய அரசின் கையில் உள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஏன் இன்னும் பதவி விலகவில்லை. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க., கடிவாளம் இல்லாத குதிரை போன்று ஆகிவிட்டனர். அமைச்சர்கள் தங்களது வாயிற்கு வந்ததை அனைத்தும் பேசி வருகின்றனர். காவிரி வேளாண்மை வாரியத்தை அமைத்தே விட்டதாக சாதனைக் கூட்டத்தை அ.தி.மு.க.,வினர் நடத்தி வருவது கேலிக்கூத்தாகும். 

தமிழகத்தில் நக்சலைட், மாவோயிஸ்ட்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அடிக்கடி கூறி வருகின்றார். உளவுத்துறை பார்க்கும் வேலையை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பார்க்கின்றார். பொன். ராதாகிருஷ்ணனா..? இல்லை பொய். ராதாகிருஷ்ணனா..? என்ற கேள்வி மக்களிடம் இருக்கின்றது. போகின்ற போக்கில் நக்சல், மாவோயிஸ்ட் என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சொல்லிவிட்டு போகக் கூடாது. யார் அவர்கள் என்பது குறித்தப் பட்டியலை பொன். ராதாகிருஷ்ணன் தெரிவிக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...