ஆதியோகி சிலை முன்பு அதிவிரைவுப்படையினர் யோகா செய்து அசத்தல்

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஆதியோகி சிலை முன்பு அதிவிரைவுப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மற்றும் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இன்று யோகா செய்தனர்.

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஆதியோகி சிலை முன்பு அதிவிரைவுப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மற்றும் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இன்று யோகா செய்தனர்.



கோவையில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி ஆதியோகி முன்பு யோகா தின நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில், ஐ.என்.எஸ்., அக்ரானி காமண்டிங் ஆபிசர் கமோடர் ராஜிவ்சவுதரி, அதிவிரைவுபடை துணை கமாண்டர் சுந்தரகுமார், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர் .ஏ.வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

மேலும், அதிவிரைவுப்படைவீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள், ஈஷா வித்யா மற்றும் கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் ‘யோக நமஸ்காரம்’, ‘ஷாம்ப விமுத்ரா’ ஆகிய யோக பயிற்சிகள் இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்பட்டன.



யோகா பயிற்சிகளுக்கு பிறகு ஐ.என்.எஸ்.,அக்ரானி கமாண்டிங் ஆபிசர் கமோடர் ராஜிவ் சவுதரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியக் கடற்படையில் பணியாற்றும் வீரர்கள் தங்களது குடும்பத்தினரைப் பிரிந்து நீண்ட நாட்கள் கடலுக்குள் கப்பலில் பணியாற்றுகின்றனர். குடும்பத்தைப் பிரிந்து கடலுக்குள் தனியாக இருப்பது, கடல் பயணத்தில் ஏற்படும் உடல்நலக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகளால் வீரர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அந்த மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்த யோகா பெரிதும் உதவியாக உள்ளது. அதனால், கடற்படை வீரர்களுக்கான பயிற்சி பாடத்திட்டத்தில் யோகாவை சேர்த்துள்ளோம்”, என்றார்.



Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...