நடிகர் அமீர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கோவை: தொலைக்காட்சி விவாத மேடையில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய வழக்கில் நடிகர் அமீர் கோவை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரிய வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை: தொலைக்காட்சி விவாத மேடையில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய வழக்கில் நடிகர் அமீர் கோவை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரிய வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் கடந்த 9-ம் தேதி கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில்  வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகர் அமீர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, அமீரின் கருத்துக்கு பா.ஜ.க.,வினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அமீர் மீதும் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் அதன் நிரூபர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கோவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, முன்ஜாமீன் வழங்க கால அவகாசம் கேட்டு வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

மேலும், விசாரணைக்கு வரும் வரை அமீரை கைது செய்யக் கூடாது என போலீசாருக்கு நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பவானி மோகன் மற்றும் வழக்கறிஞர்கள் விஜயராகவன் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...