பிரீமியர் லீக் போட்டிகளில் அனைத்து அணிகளுக்கும் பலம் அதிகம்: கோவையில் அபிநவ் முகுந்த் பேட்டி

பிரீமியர் லீக் போட்டிகளில் அனைத்து அணிகளுக்கும் பலம் அதிகம்: கோவையில் அபிநவ் முகுந்த் பேட்டி


கோவை: மூன்றாவது பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளதாக இந்திய கிரிகெட் அணி வீரர் அபிநவ் முகுந்கோவை: மூன்றாவது பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளது என்று இந்திய அணி வீரர் அபிநவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் சார்பில் மூன்றாவது சீசன் லீக் போட்டிகள் ஜூலை 11-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12-ம் தேதி  முடிவடைகிறது. 

இந்த நிலையில், விளையாட்டு குறித்து லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அபிநவ் முகுந்த் மற்றும் இந்திய 'ஏ' அணி வீரர் பாபா அபர்ஜித் ஆகியோர் கோவையில் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பாபா அபர்ஜித் கூறுகையில், "மூன்றாவது டி.என்.பி.எல்., போட்டிகள் இளைய தலைமுறை வீரர்களுக்கு சிறப்பாக அமையும் என நம்புகிறேன். இப்போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள்.



தொடர்ந்து, அபிநவ் முகுந்த் கூறுகையில், "கடந்த ஆண்டு வேறு அணிக்காக விளையாடினேன். இந்த ஆண்டு லைக்கா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளேன். கோவையில் இருந்து மூன்று வீரர்கள் அணிக்காக விளையாட உள்ளனர். 

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் ஐ.பி.எல் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது நடைபெற உள்ள போட்டிகளில் திறன் வாய்ந்த வீரர்களை கண்டறிய உதவும். 

இது குறித்து போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், "பெரும்பாலான மூன்றாவது டி.என்.பி.எல்., போட்டிகள் திருநெல்வேலி இந்தியன் சிமெண்ட்ஸ் மைதானத்திலும், திண்டுக்கல் என்.பி.ஆர்., கல்லூரி மைதானத்திலும் நடைபெறும். இதன் மூலம் மாவட்டங்களில் உள்ள அடுத்த தலைமுறையினருக்கு இப்போட்டிகள் ஒரு உத்வேகமாக அமையும். இப்போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தலா ஏழு போட்டிகளில் விளையாடி அதில் நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு எலிமினேட்டர் சுற்றில் பங்கேற்கும்.

எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் விளையாடும். மேலும், காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை புதிய உரிமையாளர்கள் வாங்கி அவற்றின் பெயர்களை ஐட்ரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூலை மாதம் 11-ம் தேதி தொடங்கும் இப்போட்டிகள், ஆகஸ்ட் 5-ம் தேதி வரை லீல் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

பரிசுக்கள்

வெற்றி பெறும் அணிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.60 லட்சமும், மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், எஞ்சிய நான்கு அணிகளுக்கு ரூ. 25 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...