பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர பஞ்சாலை சங்கங்கள் வலியுறுத்தல்

கோவை : பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானத்தை அளிக்க வேண்டும் என பஞ்சாலை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

கோவை : பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானத்தை அளிக்க வேண்டும் என பஞ்சாலை சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சீமா மற்றும் பருத்தி ஜவுளி ஏற்றுமதி கூட்டமைப்பான டெக்ஸ்புரோசில் ஆகிய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் கோவை சீமா அரங்கில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் டெக்ஸ்புரோசில் அமைப்பின் தலைவர் உஜ்வால் லகோதி கூறியதாவது :- கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவிற்கான பருத்தி நூல் ஏற்றுமதி குறைந்துள்ளது. வியட்னாமில் இருந்து சீனாவில் இறக்குமதியாகும் பருத்தி நூலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே காரணம். 

வியட்னாமில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி வரிகள் இல்லை என்பதால் இந்த நிலை உருவாகியுள்ளது. இருந்தபோதும், இந்திய பருத்தி நூலின் தரம் காரணமாகத் தொடர்ந்து ஏற்றுமதி இருந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60 ஆயிரம் புதிய ஸ்பிண்டில்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. பழைய ஸ்பிண்டில்கள் மாற்றப்பட்டு வருவதால், இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரித்த போதும், நூல் உற்பத்தி அதிகரிக்கவில்லை. 

பஞ்சாலைகள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றிற்கு இதுவரை ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவில்லை. எனவே, இலாபம் குறைவதை கருத்தில் கொண்டு, இவற்றை ஜி.எஸ்.டி., வரிக்குள் கொண்டு வந்து பஞ்சாலைகளுக்கு வரி வருமானம் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்பட பஞ்சை கண்டறிய அரசு கண்காணிப்பு குழுவை அமைக்க எடுக்க வேண்டும். இது தொடர்பாக பஞ்சாலை சங்கங்கள் அளித்துள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய ஜவுளித்துறை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...