சிறையிலிருந்து தப்பியவர்களை சினிமா பாணியில் பிடித்த குன்னூர் போலீஸ்..!

நீலகிரி: குன்னூரில் சிறையில் இருந்து தப்பிய திருடர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த காவல் துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீலகிரி: குன்னூரில் சிறையில் இருந்து தப்பிய திருடர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த காவல் துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் கதவை சில தினங்களுக்கு முன்பு உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த கொள்ளை தொடர்பாக, ஓட்டல் உரிமையாளர் தாஜிதீன் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்த கொள்ளையர்கள் வண்டிச்சோலை பகுதியிலேயே தங்கியிருப்பதை உறுதி செய்தனர். மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டறிந்த நிலையில், திருடர்கள் மூன்று பேரும் தப்பி ஓடினர். 

அவர்களை விடாது விரட்டிய மேல் குன்னூர் ஆய்வாளர் ஜெயமுருகன், உதவி ஆய்வாளர்கள் சண்முகம், யுவராஜ் ஆகியோர் விரட்டினர். சிக்காத கொள்ளையர்கள் நகரப் பகுதிகளுக்குள்ளே சென்று மறைந்தனர். போலீசாரின் சமயோசித புத்தியால் அவர்கள் மூவரும் அகப்பட்டனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் (22), குமரன் (23), குன்னூர் புருக்லேன்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (22) என்பது தெரியவந்தது. 

இவர்கள் மீது ஏற்கனவே கோவை மற்றும் தேனி பகுதியில் திருட்டு வழக்கு உள்ளது என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் குன்னூர் சிறையிலடைத்தனர். 



இந்த சூழலில், கொள்ளையர்கள் மூவரும் சிறையில் இருந்து மதியம்1:30 மணியளவில் சுவர் தாண்டி தப்பி ஓடினர். அவர்களை தாக்க முயன்ற போலீசாரையும் தாக்கியதோடு அங்கிருந்த தனியார் பள்ளி வளாகத்தில் நுழைந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீசார் மூவரையும் கைது செய்தனர். 

திருடர்களை விரட்டிப் பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...