24 மணி நேரமும் திறந்து கிடக்கும் சிங்காநல்லூர் டாஸ்மாக் பார் : முகம் சுழிக்க வைக்கும் குடிமகன்கள்

கோவை: சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரால் பொதுமக்கள், பயணிகள், மாணவ, மாணவிகள் அவதியடைவதாக புகார் எழுந்துள்ளது.



கோவை: சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரால் பொதுமக்கள், பயணிகள், மாணவ, மாணவிகள் அவதியடைவதாக புகார் எழுந்துள்ளது.

சிங்காநல்லூர் பேருந்து நிலையமானது கோவை மாநகரின் புறநகர் பேருந்து நிலையமாகும். தென் மாவட்டங்களான திண்டுக்கல், மதுரை, அருப்புக்கோட்டை, நத்தம், தேனி, திருச்செந்தூர், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த பேருந்து நிலையத்திலிருந்து தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

24 மணி நேரம்

இதனிடையே, பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் பாரால் பயணிகளுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது. பயணிகளை குறிவைத்து இந்த பார் விதிமுறைகளை மீறி 24 மணி நேரமும் செயல்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில், "இரவு நேரங்களில் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் சிலர் மற்றும் உள்ளூர் வாசிகள் சிலர் இந்த பாருக்கு சென்று எந்த நேரமும் மது அருந்துகின்றனர். இப்படி 24 மணி நேரமும் செயல்படும் பாருக்கு மது பாட்டில்கள் எப்படி கிடக்கின்றன? என்பது சந்தேகம். பாரின் அருகில் உள்ள டாஸ்மாக் கடை மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படுவதாக வைத்துக் கொண்டாலும், பாருக்குள் சென்றால் எந்த நேரமும் மது கிடைக்கிறது. 



இதனால் பயணிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாருக்கு அருகிலே தான் காவல் நிலையமும் உள்ளது. இந்த பாருக்கு உண்டான அனுமதி எண் கூட போடாமல் செயல்பட்டு வருகிறது." என்றார்.

விபத்து

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில், மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டும் நபர்களால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், டாஸ்மாக் பார் செயல்படும் வழியாக அருகில் உள்ள வீடுகளுக்கு செல்லவும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து பக்கத்து தெரு வழியாகச் சுற்றி செல்வதாகவும் கூறுகின்றனர். மது போதையில் குடிமகன்கள் செய்யும் அட்டகாசம் அவ்வழியே செல்லும் பெண்களை முகம் சுழிக்க வைக்கிறது. 

இது குறித்து பேருந்து பயணி ஒருவர் கூறும்போது, "பொதுவாக நெடும் தூரம் பயணிக்கும் போது பயண கலைப்பு தெரியாமல் இருக்க மது அருந்தி விட்டு செல்வது வழக்கம். கூலி வேலைக்குச் செல்வதால் ஊருக்குப் போக வேண்டும் என்றால் இரவு 10 மணிக்கு மேல் தான் செல்ல முடியும் அப்படிப்பட்ட சமயத்தில் இந்த பாரில் தான் மது அருந்திவிட்டு செல்வேன்," என்றார்.

மது அருந்திவிட்டு வரும் பயணிகளால் நடத்துனருக்கும் அவர்களுக்கு சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்படுகின்றது. அதே நேரத்தில் பயணிகளும் இது போன்று மது அருந்தி வருபவர்களால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இது போன்ற பார்களை இடமாற்றம் செய்ய வேண்டும். பொதுமக்களை பாதிக்காதவாறு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்கள் வைக்கும் பிரதான கோரிக்கையாகும்.

இது குறித்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்திக் கூறுகையில், "இந்த பார் மட்டுமல்ல மாநகரில் இது போன்று அரசு விதிமுறைக்கு மீறி நேரம் கடைப்பிடிக்காமல், அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் அனைத்து பார் மற்றும் டாஸ்மாக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனவரி மாதமே வருவாய் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. மேலும், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுக்கவுள்ளோம்." என்றார்.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...