தமிழகத்தின் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தின் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார்.

தமிழகத்தின் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். 



சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக 100 இடங்கள் ஏற்படுத்தப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையின்படி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக எய்ம்ஸ் அமைவது எங்கே? என அறிவிக்கப்படாமல் இழுபறி நீடித்த நிலையில், தற்போது மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் அமைந்தால் பயன்பெறும் 13 மாவட்டங்கள் மட்டுமின்றி கேரள மாநிலமும் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...