பருவ மழை தொடக்கம்; நீலகிரியில் விவசாய பணிகளுக்கு ஆயத்தம்

நீலகிரி: நீலகிரியில் பருவ மழை தொடங்கியுள்ளதால், விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், முளைப்புத்திறன் அதிகமுள்ள விதைகளை, பயன்படுத்த வேண்டும் என வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



நீலகிரி: நீலகிரியில் பருவ மழை தொடங்கியுள்ளதால், விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், முளைப்புத்திறன் அதிகமுள்ள விதைகளை, பயன்படுத்த வேண்டும் என வேளாண் அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழில் தேயிலை மற்றும் காய்கறி விவசாயம். இங்கு காய்கறிகள் 7 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. இதில், அதிகபட்சமாக கேரட் 2,200 ஹெக்டேரிலும், கிழங்கு 1,200 ஹெக்டேரிலும், முட்டைகோஸ் 900 ஹெக்டேரிலும் மற்ற காய்கறிகள் 2,700 ஹெக்டேரிலும் பயிரிடப்படுகிறது.

பருவமழை

கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதுடன் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டு விவசாயப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மழை பெய்யாததாலும், பனி தாக்கத்தாலும் நீலகிரி மாவட்டத்தில் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்கள் வறண்டு தரிசாக காட்சியளித்தன.

ஆனால், இந்தாண்டு ஏப்ரல் மற்றம் மே மாதங்களில் கோடை மழை பெய்ததால் முதல் போகம் அமோகமாக இருந்தது. தற்போது தென் மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளது. இரண்டாம் போகத்துக்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தை உழுது சமன்படுத்தி விதைப்பு பணிக்கும் தயார்படுத்தி வருகின்றனர்.



அறிவுரை

விவசாயிகள் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை அச்சுறுத்துவது போலி விதைகள். இந்த விதைகளை வாங்கி விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு, மருந்து தெளித்து அறுவடைக்கு காத்திருக்கும் நிலையில், அவை முளைக்காமல் மகசூல் வெகுவாக குறைந்து விடுகிறது.

இந்நிலையில், மலைக் காய்கறி விதைகளின் முளைப்பு தன்மை மற்றும் புறத் தூய்மையை ஆய்வு செய்து, அதன்பின் பயிரிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உதகை வேளாண் அலுவலர்கள் கூறுகையில், "பட்டாணி, பிரன்சு பீன்ஸ் விதைகளின் முளைப்புத் திறன் 75 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம் இருக்க வேண்டும். முட்டை கோஸ், முள்ளங்கி, டர்னிப் விதைகளில் முளைப்புத் திறன் 70 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம், காலி பிளவர், புருக்கோலியில் முளைப்புத்திறன் 65 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம், கேரட் விதையின் முளைப்புத் திறன் 60 சதவீதம், புறத்துாய்மை 95 சதவீதம், முள்ளங்கி, டர்னிப்பில் முளைப்புத் திறன் 70 சதவீதம், புறத்துாய்மை 98 சதவீதம், பீட்ரூட், காப்சிகம், பினாச்சில் முளைப்புத்திறன் 60 சதவீதம், புறத்துாய்மை, 98 சதவீதம் இருக்க வேண்டும்.

விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் விதைகளை பரிசோதனை கொடுத்தால், முடிவுகள் ஏழு நாட்களில் அவரவர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். விதைப் பரிசோதனை கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். எனவே, விவசாயிகள், விதைப் பரிசோதனை செய்து பயிர் செய்ய வேண்டும்." என்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...