வீட்டுமனை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலில் வீட்டுமனை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சலில் வீட்டுமனை வரைமுறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி நேரில் ஆய்வு செய்தார். 

தமிழகம் முழுவதும் அனுமதியற்ற மனைப் பிரிவில் வாங்கிய வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கு தமிழக அரசு 6 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயனடையும் வகையில், மனைகளை வரைமுறைப்படுத்துவற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், எஸ்.பெரியபாளையம், அ.பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு முகாம் திருப்பூர் பி.என்.ரோடு நெருப்பெரிச்சலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கு விண்ணப்பித்தனர். 

இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், வரைமுறைப்படுத்தப்பட்ட மனைகளுக்கான ஆணைகளையும் அவர் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த முகாமில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், உதவி ஆணையர் வாசுக்குமார், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளூர் திட்ட குழும அலுவலர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...