ஈஷா யோகா மையத்தில் 21-ம் தேதி சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 21-ம் தேதி 4-வது சர்வதேச யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 21-ம் தேதி 4-வது சர்வதேச யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. 

ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் ஈஷா அறக்கட்டளையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 4-வது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

112 அடி ஆதியோகி முன்பு காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அதிவிரைவு படை (Rapid Action Force) துணை கமாண்டர் சுந்தரகுமார், கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர் திருமதி சி.ஏ.வாசுகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

மேலும், 400 அதிவிரைவுப் படை வீரர்கள், 150 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொதுமக்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஈஷா யோகா மையத்தின் பயிற்சியாளர்கள் மூலம் சக்திவாய்ந்த ‘உப-யோகா’ இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. 

கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைச்சாலைகளிலும் ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...