நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வந்தால் அபாரதம்: வெளிமாநிலத்தவர்களுக்கு எச்சரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிகளில் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, அதை உட்கொண்டு வன விலங்குகளும் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு இயற்கையைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுப்ரியா சாகு நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தார். மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட எல்லைகளில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட மாவட்டம் என விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களிடையேயும், சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தற்போதைய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, கடந்த 13-ம் தேதி 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, அண்டை மாநிலங்களான கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை கக்கநல்லா சோதனை சாவடியிலும், கேரளா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை பாட்ட வயல், நாடு காணி போன்ற சோதனை சாவடிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



பிளாஸ்டிக் பொருட்கள் காரில் இருந்தால் ரூ.50-ம், டெம்போ டிராவலருக்கு ரூ.100-ம், சுற்றுலாப் பேருந்துகளுக்கு ரூ. 250-ம், சில்லரை விற்பனைக்காக எடுத்து வரும் வாகனங்களுக்கு ரூ.10,000-ம் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது, தமிழகத்தில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியரின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...