தமிழக உயர்கல்வித் துறை செயலரை முற்றுகையிட்ட தொகுப்பூதிய பணியாளர்கள்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தமிழக உயர்கல்வித் துறை செயலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தமிழக உயர்கல்வித் துறை செயலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பாரதியார் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் 550 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே வழங்கிவரும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இதற்காக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதிய உயர்வு அடிப்படையில் பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படாத சூழலில் பாரதியார் பல்கலைக் கழக பொறுப்பாளரும் தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருமான சுனில் பாலிவால் தலைமையில் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. 

அப்போது அங்கு திரண்ட 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக உயர்கல்வி துறை செயலரிடம் முறையிட்டனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்கல்வித் துறை செயலர், கடந்த 2015-ம் ஆண்டு ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு அதில் 25 சதவிகிதம் ஊதியம் உயர்த்தி வழங்குவதாகக் கூறினார். ஆனால் அதனை ஏற்காத பணியாளர்கள் கூட்டம் நடைபெற்ற அரங்கின் முன்பாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே, கூட்டம் முடிந்து வெளியே வந்த சுனில் பாலிவாலை முற்றுகையிட்ட பணியாளர்கள் மீண்டும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர் அப்போதும்  அவர்களை சந்திக்க மறுத்த உயர்கல்வித் துறைச் செயலர் தற்போது 25 சதவிகித ஊதிய உயர்வு மட்டும் வழங்கப்படும் எனவும் புதிய குழு ஒன்றை அமைத்து ஊதியத்தை நிர்ணயம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதியத்தில் முரண்பாடு உள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட புதிய ஊதிய உயர்வு தொடர்பான அறிக்கையிலும் தவறுகள் இருப்பதால் அதனை செயல்படுத்த முடியாது. மேலும், இது தொடர்பாக பணியாளர் சங்க நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...