கோவையில் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டி தொடக்கம்

கோவை: 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியை மத்திய கயிறு வாரியத்துறை அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியை மத்திய கயிறு வாரியத்துறை அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று தொடங்கி வைத்தார். 



கோவை உள்பட நாடு முழுவதும் உள்ள 10 இடங்களில் நடக்கும் இந்தப் போட்டிகள் 5 நாட்கள் நடைபெறுகிறது. கோவையில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய கயிறு வாரியத்துறை அமைச்சர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், "சிறிய கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் தொழில்நுட்ப உதவியுடன் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளினால் உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற மத்திய அரசுகளின் தேசிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு அருமையான அடித்தளமாகும்," என்றார். 



'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2018' போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 1,00,000 பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்திற்கு ரூ.75,000-ம், 3-வது இடத்திற்கு ரூ. 50,000-ம் வழங்கப்படும். வெற்றி பெறும் அணிக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...