பழங்குடியின காளைகளின் ரத்த மாதிரிகளை சேகரிக்க வந்த மர்ம கும்பலால் பரபரப்பு

திருப்பூர்: தமிழகத்தின் பழமை வாய்ந்த காளைகளின் ரத்த மாதிரிகளை சேகரிக்க காங்கேயம் கால்நடைகள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உரிய ஆதாரமற்ற அதிகாரிகள் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: தமிழகத்தின் பழமை வாய்ந்த காளைகளின் ரத்த மாதிரிகளை சேகரிக்க காங்கேயம் கால்நடைகள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உரிய ஆதாரமற்ற அதிகாரிகள் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி ஃபேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் :- கடந்த 11-ம் தேதி மத்திய அரசு அதிகாரிகள் எனக் கூறிக் கொண்டு, ஐதராபாத்தில் இருந்து வருவதாகக் காங்கேயம் கால்நடைகள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வந்தவர்கள் சிலர் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்கள் மத்திய அரசாங்கத்தின் கால்நடை வளர்ப்பு மரபணு வரிசைமுறை திட்டத்திற்காக., காங்கேயம் மற்றும் பிற பழங்குடியின காளைகளின் ரத்த மாதிரிகள் வேண்டும் என கேட்டனர். ஆனால், மத்திய அரசு அதிகாரிகள் என்பதற்கான ஆதாரம் இல்லாததால், அவர்களுக்கு கால்நடைகளின் மாதிரிகள் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் திரும்பிச் சென்றனர், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கார்த்திகேய சிவசேனாதிபதி ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றிற்கு அளிக்கையில், "மத்திய அரசு ஊழியர்கள் என வந்தவர்களின் ஒருவரது பெயர் கோகலே என்பது பார்வையாளர்களின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் குறைந்தபட்சம் 1,000 காங்கேயம் காளைகள் மற்றும் மாடுகளின் ரத்த மாதிரிகள் வேண்டும் எனக் கூறினர். உரிய ஆதாரமில்லாத அந்த அதிகாரிகளின் வந்ததற்கான காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது," என்றார். 

மர்ம நபர்களின் இந்த வருகை குறித்து காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி சார்பில், தேசிய பல்லுயிர் அதிகார சபை மற்றும் மாநில கால்நடைத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பாரம்பரியமிக்க காளைகள் மற்றும் மாடுகளின் மாதிரிகளை சேகரிக்க மர்ம நபர்கள் முயன்று வருவதால், கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் உஷாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...