மதுக்கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி 68-வது வார்டு பா.ஜ.க., சார்பில் மனு

கோவை: மதுக்கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி 68-வது வார்டு பா.ஜ.க., சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை: மதுக்கடையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி 68-வது வார்டு பா.ஜ.க., சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அருகே 500 மீட்டருக்குள் அமைந்துள்ள மதுபான கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 160-க்கும் மேற்பட்ட மது கடைகள் மூடபட்டன.தற்போது தமிழக அரசு மூடப்பட்ட கடைகளை திறக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

இந்த சூழலில், ராமநாதபுரம் 68-வது வார்டு 80 அடி சாலையில் இயங்கி வந்த மதுபான கடையும் மூடப்பட்டது. தற்போது அந்த கடையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கண்டித்து 68-வது வார்டு பா.ஜ.க., மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிதா ராஜன் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் இது குறித்து தெரிவிக்கையில், ஏராளமான குடியிருப்புகள், கோவில்கள், திருமண மண்டபங்கள் உள்ளதாலும் சனிக்கிழமைகளில் வார சந்தை நடைபெறுவதாலும் அப்பகுதியில் கடையை திறக்கக் கூடாது என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...