உயிரைப் பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தில் பயணம் செல்லும் உடுமலை மலைக்கிராம மக்கள் : சம்பக்காடு பகுதியை மீட்டு தரக் கோரிக்கை

திருப்பூர்: உடுமலை அருகே மலைவாழ் மக்களின் வழித்தடத்தைக் கேரளா வனத்துறையினர் அடைத்ததால், வேறு வழியின்றி உயிரைப் பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தில் பயணிக்க வேண்டிய நிலைக்கு மலைக் கிராம மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்: உடுமலை அருகே மலைவாழ் மக்களின் வழித்தடத்தைக் கேரளா வனத்துறையினர் அடைத்ததால், வேறு வழியின்றி உயிரைப் பணயம் வைத்து ஆற்று வெள்ளத்தில் பயணிக்க வேண்டிய நிலைக்கு மலைக் கிராம மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம் கீழானவயல், தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இவற்றில், 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல நூறு ஆண்டுகளாக தங்கள் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த சம்பக்காடு பாதையை பயன்படுத்தி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் கேரளா வனத்துறையினர் அந்தப் பகுதி தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, கம்பி வேலி அமைத்து தமிழக பகுதி மலைவாழ் மக்கள் சென்று வர அனுமதி மறுத்தது.



இதனால், மலைவாழ் மக்கள் 6 கி.மீ., சுற்றி கூட்டாறு வழியாக சென்று வந்தனர். தமிழக வனத்துறை அதிகாரிகள் சார்பில் கேரளா வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், மலைவாழ்மக்கள் திரும்ப அந்த வழித்தடத்தைப் பயன்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக சாக்கு போக்கான பதில்களை கூறி வந்தனர். 4 மாதங்கள் ஆகியும், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் தமிழக வனத்துறை சார்பில் எடுக்கப்படவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் பெய்து வரும் கன மழை மற்றும் கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இப்பகுதி மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வந்த கூட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அடிப்படைத் தேவைகள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கோ அவர்கள் ஆற்றில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. நேற்று முன்தினம் ரேசன் பொருட்கள் வாங்கி சென்ற 3 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் ஆற்றைக் கடக்கும் போது குடும்ப அட்டைகள் மற்றும் ரேசன் பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அவர்கள் சிறிது தூரத்தில் மரக்கிளைகளைப் பிடித்து கரை ஒதுங்கி உள்ளனர்.



மலைவாழ் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசின் இலவச அரிசி கொண்டு சென்ற வாகனமும், ஆற்றைக் கடக்க முடியாததால் சின்னாறு வனத்துறை சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் அடிப்படை தேவைகளான உணவுக்கு தேவையான பொருட்கள் கூட வாங்குவதற்கு வெளியில் வர முடியாத சூழல் உள்ளது. மலைவாழ் மக்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளுடன் தோளில் சுமந்தபடி, உயிரை பணயம் வைத்து தினமும் கடந்து செல்கின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப அட்டைகள் திரும்ப கிடைக்க அரசு அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறுகின்றனர்.



மழை தொடர்ந்தால் 600 குடும்பங்களும் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கூட்டாறு பகுதியில் மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும் அல்லது கேரளா வனத்துறையிடம் பேச்சு நடத்தி பல நூறு ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த சம்பக்காடு பகுதியை மீட்டுத் தர வேண்டும் என்பதே அப்பகுதி மலைவாழ் மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...