நீலகிரி: தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இணையும் எல்லையில் கூடலூர் அமைந்து உள்ளது. கூடலூர், பந்தலூர் என இரண்டு தாலுகாக்களை கொண்ட சட்டப்பேரவை தொகுதியாக விளங்குகிறது. இங்கு 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமவெளி மற்றும் மலைப்பாங்கான பள்ளத்தாக்குகள் நிறைந்த கூடலூர் பகுதியில் போக்குவரத்து வசதி மிக குறைவாக உள்ளது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழக கிளை அலுவலகத்தில் இருந்து 48 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோவை, ஊட்டி, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல் பெங்களூர், மைசூர் பகுதியில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு கர்நாடகா அரசு பேருந்துகளும், கோழிக்கோடு, பெருந்தல்மன்னா, சுல்தான்பத்தேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடலூருக்கு கேரள அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதனால் மூன்று மாநில பொதுமக்கள் வந்து செல்லும் மையமாக கூடலூர் திகழ்கிறது. இது தவிர அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தனியார் வாகனங்கள்
கூடலூரில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்வதற்கு பேருந்து வசதி உள்ளது. ஆனால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சரிவர பேருந்து வசதி கிடையாது. இதனால் தனியாருக்கு சொந்தமான ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்களையே கிராம மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கூடலூர் நகர பகுதியில் மட்டும் சுமார் 2,500 ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருவதால் தனியார் வாகனங்களின் கட்டணம் அதிகரிக்கும் நிலை உருவாகி வருகிறது. பெருகி வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதியும் நகர பகுதியில் இல்லை. இதனால், வாகனங்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த நகர பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகர பேருந்துகள் அதிகளவு இயக்கினால் பொதுமக்களிடம் வரவேற்பு பெறும். மேலும் போக்குவரத்து கழகத்துக்கு போதிய வருமானமும் கிடைக்கும் என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் தமிழக-கேரள போக்குவரத்து துறையினர் இடையே புதிய ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதில் கூடலூர்-வழிக்கடவு, கல்பட்டா மற்றும் கோழிக்கோடு-கூடலூர், ஊட்டி-திருவனந்தபுரம், மானந்தவாடி-கூடலூர் வழியாக கோவை, திருச்சூர், தொடுபுழா, பெங்களூரு பகுதிக்கு தமிழக-கேரள அரசு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல், கூடலூரில் நகர பேருந்துகள் அதிகளவு இயக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக தொரப்பள்ளி - மேல்கூடலூர் அரசு ஆஸ்பத்திரி வரையும், கூடலூர்-பந்தலூர், தேவர்சோலை இடையே முதற்கட்டமாக பேருந்துகள் இயக்க வேண்டும்.
பின்னர், பொதுமக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து கூடலூர்-செம்பாலா, ஆனைசெத்தக்கொல்லி, 1-வது மைல், கூடலூர் ரவுண்டானா வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு வரும் வகையில் நகர பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.