மேட்டுப்பாளையத்தில் நாட்டு மாடு வகைகளின் கண்காட்சி: பாரம்பரியத்தை காக்க இளைஞர்கள் முயற்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளிடையே நாட்டு மாட்டு வளர்ப்பை ஊக்குவிக்கவும் அதன் பயன்களை விளக்கும் வகையிலும் கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து கோவில் நாட்டு மாடுகளின் கண்காட்சியை நேற்று நடத்தினர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் விவசாயிகளிடையே நாட்டு மாட்டு வளர்ப்பை ஊக்குவிக்கவும் அதன் பயன்களை விளக்கும் வகையிலும் கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து கோவில் நாட்டு மாடுகளின் கண்காட்சியை நேற்று நடத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள மூடுதுறை ஊராட்சிக்குட்பட்ட குமாரபாளையம் கிராமத்தில் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் கூடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அப்பகுதி இளைஞர்கள் கோவிலின் வளாகம் அருகிலேயே நாட்டு மாடு கண்காட்சியினை நடத்தினர்.



விவசாயத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக 'நமது ZOO' என்ற பெயரில் நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் உழவுக்குப் பயன்படுத்தப்படும் காளைகள், பால் கறவை நாட்டு மாடுகள், குட்டை ரக காளைகள், காங்கேயம் காளைகள் என 18 வகையான நாட்டு மாடுகளை வைத்திருந்ததோடு, உள்நாட்டு நாட்டுக் குதிரைகளும் கோழி வகைகளையும் வைத்திருந்தனர்.



கோவில் விழாவிற்கு வந்திருந்த மக்கள் இதனை மிகுந்த ஆர்வதுடன் கண்டு ரசித்ததோடு அதன் தன்மைகளையும் கேட்டறிந்தனர். கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் முக்கிய உப தொழிலாக இருக்கும் நிலையில், பலரும் தற்போது பல்வேறு காரணங்களினால் இதனை கைவிட்டு வருகின்றனர் அல்லது நாட்டு மாட்டு ரகங்களை விட்டுவிட்டு நமது மண்ணுக்கு பொருத்தமில்லாத ஜெர்சி ரக வெளிநாட்டு மாடுகளை வளர்க்கின்றனர்.



இதனை மாற்றி மீண்டும் நமது விவசாயத்தை பாரம்பரிய முறைக்கு மாற்றவும், இயற்கை உரங்களை அள்ளித்தரும் நாட்டு மாட்டு வளர்ப்பை அவர்களிடையே ஊக்குவிக்கவுமே இக்கண்காட்சி நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தங்களின் இம்முயற்சி பெரிதும் பலனளிப்பதால் இது போன்று கிராம விழாக்களில் தொடர்ந்து இந்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்படுவதன் மூலம் நமது பாரம்பரிய விவசாய முறைகளையும் கால்நடை வளர்ப்பையும் மீட்டு எடுக்க முடியும் என்கின்றனர் இளைஞர்கள்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...