கோவை: வால்பாறையில் வட்டாரத்தில் நால்வரை தாக்கியோடு, தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப் புலியை வனத்துறையினர் கூடு வைத்து பிடித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாக சிறுத்தைப் புலி ஒன்று மக்களை அச்சுறுத்தி வந்தது. அந்த சிறுத்த இதுவரை நான்கு பேரை காயப்படுத்தியதோடு, ஒருவரை கொன்றது. இதன் காரணமாக வால்பாறையில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் வால்பாறையில் போக்குவரத்து முடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சின்கோனா பகுதி குடியிருப்பு உட்பட மூன்று இடத்தில் கூண்டு வைத்து கண்காணிக்கப்பட்டது. மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க நவீன காமிரா பொருத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை சின்கோனாவில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தைப் புலி சிக்கியது. தொடர்ந்து சிறுத்தை சிக்கிய கூண்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அது, ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்று வனத்துறை மருத்துவர் மனோகரன் கூறியுள்ளார்.
தற்போது, சிறுத்தைப் புலி பிடிபட்டிருந்தாலும், மேலும், சில சிறுத்தைகள் சுற்றித் திரிவதால், வால்பாறையில் தொடர்ந்து, கூண்டு வைத்து கண்காணிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.