கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வாரியான உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Coimbatore:

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டல பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

சாலைகளில் மழைநீர் தேங்குவதை விரைவாக அகற்றும் வகையில் ரயில் நிலையம், லங்கா கார்னர், அவிநாசி மேம்பாலம், கிக்கானி பள்ளி மற்றும் காளீஸ்வரா மில் உள்ளிட்ட பகுதிகளில் உயர் திறன் கொண்ட மின் மோட்டார்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அவிநாசி மேம்பாலம் அருகே 184 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டருடன் ஐந்து மின் மோட்டார்களும், காளீஸ்வரா மில் பகுதியில் 125 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டருடன் மூன்று மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் கூடுதல் மின் மோட்டார்களும் தயார் நிலையில் உள்ளன.

அதேபோல், பலத்த காற்று மற்றும் மழையின் போது சாலைகளில் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் விழுந்தால் அவற்றை உடனடியாக அகற்றுவதற்காக கூடுதல் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் குறைகள் அல்லது அவசர தேவைகள் ஏற்பட்டால் மாநகராட்சியின் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், வடக்கு மண்டலத்திற்கு 89259 75980, மேற்கு மண்டலத்திற்கு 89259 75981, மத்திய மண்டலத்திற்கு 89259 75982, தெற்கு மண்டலத்திற்கு 90430 66114 மற்றும் கிழக்கு மண்டலத்திற்கு 89258 40945 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...