நீலகிரியில் அபாயகரமான பகுதிகள் இத்தனையா...?, இயற்கை பேரிடரில் இருந்து மக்களைக் காக்கும் புதிய தொழில்நுட்பம்

நீலகிரி : நிலச்சரிவு பட்டியலில் உள்ள நீலகிரியில் வெள்ள அபாயம் மற்றும் பேரிடர் பாதிப்புகளை அறியக் கண்டுபிடிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை தொழில் நுட்பக்கருவிகள் மாவட்டத்தில் முதன்முறையாக 25 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி : நிலச்சரிவு பட்டியலில் உள்ள நீலகிரியில் வெள்ள அபாயம் மற்றும் பேரிடர் பாதிப்புகளை அறியக் கண்டுபிடிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை தொழில் நுட்பக்கருவிகள் மாவட்டத்தில் முதன்முறையாக 25 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

அபாயகரமான பகுதிகளின் எண்ணிக்கை :

தமிழகத்தில் நிலநடுக்க பட்டியலில் உள்ள மாவட்டங்களில் நீலகிரி மாவட்டமும் இடம் பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு, பேரிடர் மற்றும் பெரு மழைக்காலங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும், கனமழையின் போது பேரிடர்கள் ஏற்படும் பகுதியாக மாவட்டத்தில் 216 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், அந்தந்த பகுதியிலுள்ள சமுதாய கூடங்கள், பள்ளிகள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரிடர் வந்த பின் காப்பதை விட, பேரிடர் வருவதை முன்பே கண்டறிந்து மக்களைக் காக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தற்போது, குன்னூர் தாலுகா பகுதிக்குட்பட்ட 25 பேரிடர் அபாயப் பகுதிகளைக் கண்டறிந்து சமுதாயக் கூடங்கள், கோவில்கள் மற்றும் பள்ளிகளில் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.



முன்னெச்சரிக்கை கருவியின் செயல்முறை :

பேரிடர் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் ஒரு கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்து, அங்கு மொபைல் போன், பேட்டரி பேக்அப், வானொலி, மைக் போன்ற பொருட்கள் வைக்கப்படும். ஊரின் மையப்பகுதியில் உயரமான கம்பத்தில் ஒலிபெருக்கிகள் வைக்கப்படும். அந்தக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மொபைல் போன் எண்கள் ட்ரிக்கர் முறையில் பேரிடர் மேலாண்மையை மேற்கொள்ள உள்ள அலுவலர்களின் எண்களுடன் இணைக்கப்படும்.



குறிப்பிட்ட அந்த இடத்தில் பெய்யும் மழை அளவு, 10 நிமிடத்திற்கு ஒருமுறை கணக்கிடப்படும். தொடர் மழை வெள்ள அபாயம் உட்பட பேரிடர்களை ஏற்படுத்தும் என தெரியவந்தால், சம்மந்தப்பட்ட அலுவலர்களின் மொபைல்போன் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். அந்தத் தகவல் சம்மந்தப்பட்ட இடத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைந்துள்ள ஒலி பெருக்கியில் கேட்கும் வகையில் தொழில் நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



இது மட்டுமல்லாமல், வானொலி நிலையத்தின் உதவியோடு, மழை நிலவரம், வெள்ள அபாயம் குறித்த தகவல்களை அவ்வப்போது ஒலிபரப்பி அதை அப்பகுதிமக்கள் கேட்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்டத்தில் 10 இடங்களில் அமைக்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது குன்னூர் தாலுகா பகுதியில் 25 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. 



பேரிடர் காலங்களில் மட்டுமல்ல...!

இந்தத் தொழில்நுட்பத்தை பேரிடர் காலங்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் அரசின் அறிவிப்புகள், திருவிழா நாட்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற அறிவிப்புகளைக் கொடுக்கும் வகையில் தொடர்ந்து பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனென்றால், தொடர்ந்து பயன்படுத்தும் போது ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலும், அதை சரி செய்ய வாய்ப்பாக இருக்கும் என இந்தக் கருவியை உருவாக்கிய மாவட்டத்தின் பேரிடர் ஆலோசகர் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல் இயக்குனர் பிராங்க்ளின் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...