உதகை பேருந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருநாவுக்கரசர்

கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோவை: உதகையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- ஊட்டி பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த இழப்பீடு போதாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். காயம்பட்டவர்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கவில்லை. அவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தேசிய சுற்றுலாத் தளமாக உதகை விளங்கி வரும் நிலையில், அங்கு அனைத்து வசதிகளும் கொண்ட மல்டிலெவல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட வேண்டும். அப்போது, உயிரிழப்புகள் தடுக்கப்படும். ஏனெனில் ஒவ்வொரு விபத்தின் போதும், உயர்சிகிச்சை பெற கோவைக்கு தான் வர வேண்டியதாக உள்ளது. எனவே, உதகையில் மல்டிலெவல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட வேண்டும். மலைப்பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் தரமானதாகவும், நல்ல முறையிலும் இருக்க வேண்டும். ஆனால், இங்கு இருப்பதெல்லாம் காலாவதியான பேருந்துகள்தான். எனவே, மலைப்பகுதிக்கு நல்ல தரமான பேருந்துகளை இயக்க வேண்டும். என்றார்.

தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி கருணை மனு நிராகரிப்பு குறித்து அவர் மேலும் பேசியதாவது :- கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராகுல்காந்தி குடும்பத்தினர் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினர். இருப்பினும், தற்போது குடியரசுத் தலைவர் அவர்களது கருணை மனுக்களை நிராகரித்துள்ளது என்பது அவரின் கருத்து. எனவே, சம்மந்தப்பட்டவர்கள் இனி நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற முயற்சிக்கலாம். மனஅழுத்தம், வருத்தம் காரணமாக பேரறிவாளனைக் கருணை கொலை செய்யுமாறு அற்புதம்மாள் கூறுவது ஏற்புடையது அல்ல.

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகள் வேறு, வேறு கருத்துகளை கூறியுள்ளனர். இதனை வழங்கவே 8 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. எனவே, மூன்றாவது நீதிபதி விரைவாக வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும். ஏனெனில் இது தனி நபர் பிரச்சனை அல்ல. தொகுதி மக்களின் பிரச்சனை. இது 18 எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்த 40 லட்சம் மக்களின் பிரச்சனையாகும். மேலும் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியில் இருக்கிறோமா..? இல்லையா..? என்பது கூட தெரியாமல் உள்ளனர். இதனால், தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, நீதிமன்றம் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும், என்றார். மேலும், இன்று ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...