கோவை : வரும் நவம்பர் மாதத்திற்குள் அனைத்துப் பரிவர்த்தனைகளும் கணினி மயமாக்கப்படும் என கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் மூலம் முழு கணினி மயமாக்குதல் குறித்த பயிற்சி அரசு அலுவலர்களுக்கு கடந்த 11-ம் தேதி முதல் 16 வரை நிர்மலா கல்லூரியில் நடக்கிறது. இதில், கோவை மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலரும் கருவூலம் மற்றும் கணக்குதுறை ஆணையர் ஜவகர், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வன அலுவலர் வெங்கடேஷ் பேசும்போது :- பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருவதன் மூலம் வரும் காலங்களில் பணி மாறுதல் மற்றும் ஓய்வூதியம் ஆகியன எளிதாகிவிடும். இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதனை அரசு ஊழியர்கள் முழுமையாக தெரிந்து கொண்டு பயனடைய வேண்டும், என்றார்.
மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில், "கோவை மாவட்டத்தில் 32,847 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 32,000 கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களும் விரைவில் இதில் இணைக்கப்படுவார்கள். காகிதமற்ற பணிகள் நடைமுறைப்படுத்தப்படும் போது வேலை எளிதாகிவிடும்," எனக் கூறினார்.

பின்னர், அரசு முதன்மை செயலரும், கருவூலம் மற்றும் கணக்குதுறை ஆணையருமான ஜவகர் கூறியதாவது :- தமிழகத்தில் கருவூலங்கள் 1964-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வரவு, செலவு கணக்குகள் அனைத்தும் கருவூலங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன. இதுவரை கருவூல கணக்குகள் காகித கட்டுகளாக அனுப்பி வைக்கப்பட்டு வந்ததால், காலம் மற்றும் நேரம் விரயம் ஏற்பட்டது. கணினி மயமாக்கப்படும் போது அரசு ஊழியர்களின் வரவு, செலவு கணக்குகள் அனைத்தும் இருக்கும் இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள முடியும்.

இதற்கு முன்பு அரசு ஊழியர்களின் தகவல்கள் சர்வீஸ் ரெஜிஸ்டர் மூலம் அறியப்பட்டு வந்தது. கணினிமயமாக்கப்படும் போது, ஒருவருடைய அனைத்து தகவல்களும் எளிதாகிவிடும் என்பதால், இந்த முயற்சிக்கு முழுமுயற்சி எடுத்து அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் பயனீட்டாளர் பெயர், கடவுச் சொற்கள் வழங்கப்படும். தற்போது, 150 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 3,000 பேருக்கு வரும் நவம்பர் 1-ம் தேதிக்குள் பயிற்சி அளிக்கப்பட்டு, காகிதமற்ற பரிவர்த்தனையாக மாற்றப்படும், என்றார்.