திருப்பூரில் முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் : திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே முறைகேடாக இயங்கி வந்த எண்ணெய் குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஷெரீப் காலனி அரண்மணைபுதூர் பகுதியில் சுரேஷ் (33) என்பவர் போலியான எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம் வைத்து நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்றைய தினம் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த ஆய்வின் முடிவில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் போலியான முகவரியுடன், கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயிலை நிரப்பி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும், இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளில் சுமார் 1,500 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த இரண்டு வகையான எண்ணெய் பாக்கெட்டுகளின் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவிற்குப் பிறகு எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, பொதுமக்கள் எண்ணெய்கள் வாங்கும் போது மிகவும் கவனத்துடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேவி, காலாவதி தேதி, முழுமையான முகவரி, பேட்ச் நம்பர் போன்ற இதர விபரங்களைக் கண்டறிந்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...