மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் முறைகேடு : முன்னாள் மற்றும் இன்னாள் வனத்துறை அதிகாரிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு

மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மற்றும் தற்போதைய பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரிகள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மற்றும் தற்போதைய பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரிகள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தமிழக அரசு கடந்த 2011-ல் வனப்பகுதிகள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்று நடுதல் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தைக் கொண்டு வந்தது. வனத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டத்துக்கு ஜப்பான் நிதியுதவி அளித்தது. 2011 - 2019 வரை ரூ. 668 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வந்தன. இந்நிலையில், திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. 

அதன்படி, தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய விசாரணையில் பல மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில், கோவை மண்டல வனத்துறையில் 2014ல் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை வனத்துறை மண்டலத்துக்கு உட்பட்ட, 16 கிராமங்களில் மரங்கன்றுகள் நட, 33.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், மரங்கன்றுகள் நடவு செய்யாமல் போலியாக 'பில்' தயாரித்து, மரங்கன்றுகள் நடப்பட்டதாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழல் செய்தது தெரிய வந்தது.

கோவை மண்டல வனத்துறை அதிகாரி பொறுப்பில் இருந்த சேகர் (55), ஓய்வு பெற்ற வனச்சரகர் முருகேசன் (63), வனத்துறை ஒப்பந்ததாரர் கணேசன், (59), ஆகியோர் ஊழல் முறைகேடு செய்தது தெரியவந்துள்ளது. 

மேலும், கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்குட்பட்ட வன அதிகாரிகள் கே. நாகேஷ், ஜி. விமலநாதன் (ஊத்தங்கரை), பன்னீர்செல்வம் (ராயக்கோட்டை வனச்சரகம்), அண்ணாதுரை (கிருஷ்ணகிரி), வேழவந்தான் (ஒசூர்), ஓய்வுபெற்ற அதிகாரி எம். பெருமாள், எம். ராமகிருஷ்ணன், பி. மோகன்குமார், வி. நாகராஜன் உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...