முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் அரசு டெண்டர்கள் ஒதுக்கியது தொடர்பாக தி.மு.க., சார்பில் விஜிலென்ஸ் கமிஷனருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தின் கஜானா பொதுமக்களுக்கு செயல்படுகிறதோ இல்லையோ, அ.தி.மு.க., அரசின் ஊழலுக்குப் பயன்படுத்தப்பட்டு பகல் கொள்ளை அநியாயமாக அரங்கேறி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் இமாலய டெண்டர் ஊழல்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில், தி.மு.க., நீதிமன்றத்தை நாட தயங்காது.
நெடுஞ்சாலை துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும் மோசடி செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெண்டர்களை வழங்கியது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஜிலென்ஸ் கமிஷனருக்கு தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.