வேளாண் பல்கலையில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு www.tnau.ac.in என்ற பல்கலைக்கழக இணையதள வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பொழுது, விண்ணப்பக் கட்டணத்திற்கான (Rs.1,000/- SC/ST Rs. 500/-) வங்கி தொடர்பான இணைப்பு தரப்பட்டிருக்கும்.

இணையதள மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து அதனுடன், தகவல் குறிப்பேட்டில் (Information Brochure) குறிப்பிட்ட அனைத்து தேவையான ஆவணங்கள்; இணைத்து முதன்மையர், முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக அனுப்ப கடைசி தேதி முதுகலை பட்ட மேற்படிப்பிற்கு 11-7-2018 மற்றும் முனைவர் பட்ட மேற்படிப்பிற்கு 13-7-2018 ஆகும்.

நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை பற்றிய அனைத்து தகவல்களும் மின் அஞ்சல் (e-mail) மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். ஆகவே அனைத்து மாணவர்களும் தங்களது மின் அஞ்சல் மற்றும் கைபேசி எண்ணை சரியாக விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும். பல்கலைக்கழகத்தின் இணையதளத்தினையும் தினமும் தவறாது பார்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...