நீலகிரியில் கரடி தாக்கி பெண் படுகாயம் : கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி: குன்னுார் அருகே கரடி தாக்கியதில் மேகலா என்ற பெண் படுகாயமடைந்தார்.

நீலகிரி: குன்னுார் அருகே கரடி தாக்கியதில் மேகலா என்ற பெண் படுகாயமடைந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக காட்டெருமை, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. அந்த விலங்குகள் அவ்வப்போது மக்களைத் தாக்குவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், குன்னுார் அருகே நேர்கம்பை கிராமத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் (42) என்பவரது மனைவி மேகலா (30) வீட்டிற்கு விறகு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று மேகலா மேல் பாய்ந்து தாக்கியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் கரடியை கட்டையால் தாக்கி விரட்டினர். கரடி புதருக்குள் சென்று மறைந்துவிட்டது. பின்னர், படுகாயமடைந்த மேகலாவை குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அதே பகுதியில் சுற்றித்திரியும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...