நீர் வரத்து அதிகரிப்பு: இன்னும் மூன்று அடியில் நிரம்பக் காத்திருக்கிறது பில்லூர் அணை

கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள சூழலில், இன்னும் மூன்றே அடியில் பில்லூர் அணை நிரம்ப உள்ளது.


கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள சூழலில், இன்னும் மூன்றே அடியில் பில்லூர் அணை நிரம்ப உள்ளது.

நடப்பு ஆண்டில் பருவமழை தொடங்கும் முன்பே கோவையில் மழை வரத்து அதிகரித்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக மழைப் பொழிவு உள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.



அதிக நீர்வரத்து காரணமாக கோவை மற்றும் நீலகிரியில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

பில்லூர் அணை

பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம் நூறு அடி என்ற நிலையில், கடந்த பத்தாம் தேதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனையடுத்து அன்றைய தினமே அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. 

இதனால் ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, இன்னும் மூன்றே அடியில் மீண்டும் அணை நிரம்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அணைகள் (கோவை) 






சோலையார் அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. இந்த அணையில் தற்போது 103.84 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 6273.50 கன அடியாக உள்ளது. 

பரம்பிக்குளம் அணையின் மொத்த கொள்ளளவு 72 அடி. இந்த அணையில் தற்போது 11.90 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 1988 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 7 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது 58.40 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 240 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 34 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மழை அளவு (கோவை)







கோவையில் நேற்று சராசரியாக 43.31 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் ஓவொரு பகுதியிலும் பெய்த மழை அளவுகளின் விவரங்கள் பின்வருமாறு. 

பீளமேடு 14.90 மி.மீ, மேட்டுப்பாளையம் 9.00 மி.மீ, பொள்ளாச்சி 2.00 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 7.00 மி.மீ, சூலூர் 5.20 மி.மீ, வேளாண் பல்கலை., 25.60 மி.மீ, சின்கோனா 127 மி.மீ, பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 89 மி.மீ, வால்பாறை 95 மி.மீ. கோவை தெற்கு 20 மி.மீ, சின்னக்கல்லார் 125 மி.மீ.




மழை அளவு (நீலகிரி) 

கிளன்மார்கன் 44 மி.மீ, அவலாஞ்சி 164 மி.மீ, எமரால்டு 45 மி.மீ, அப்பர் பவானி 186 மி.மீ, கேத்தி 48 மி.மீ, கூடலூர் 87 மி.மீ, தேவாலா 92 மி.மீ. போர்த்திமுண்டு 97 மி.மீ, பார்சன் வேலி 84 மி.மீ, முக்கூர்த்தி 78 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...