குட்கா வழக்கை திசை திருப்புகின்றனர் : நீதிமன்றத்தில் ஆஜரான எம்.எல்.ஏ., நா.கார்த்திக் பேட்டி

கோவை : குட்கா ஆலை வழக்கில் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கோவை : குட்கா ஆலை வழக்கில் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 

சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் குட்கா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. அந்த ஆலையில் போலீசார் சோதனை நடத்திய போது, அங்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க., தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் உட்பட 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 

இந்த வழக்கில், நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மற்றும் தங்கராஜ் ஆகியோர் கோவை மாவட்ட விடுமுறை கால நீதிமன்றத்தில் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருந்தனர். முன்ஜாமீனை அடுத்து சூலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வேடியப்பன் மறு உத்திரவு வரும் வரை இருவரையும் சூலூர் காவல் நிலையத்தில் தினமும், கையெழுத்து இட உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கண்ணம்பாளையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குட்கா ஆலை விவகாரத்தில், நியாயமான முறையில் போராடிய தி.மு.க.,வினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளனர். 

இதுதொடர்பாக, என் மீதும், பொய் வழக்கு போடப்பட்ட நிலையில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தற்போது சூலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளேன். இதில், தி.மு.க.,விற்கு எந்தத் தொடர்பும் இல்லை. குட்கா தொழிற்சாலையில் சோதனை நடப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றேன். தி.மு.க.,வினர் அற வழியில் தான் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தி.மு.க., ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், கடந்த 27-ம் தேதி, குட்கா வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியது. ஆனால், இது வரை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் வலியுறுத்தி வருகிறோம். 

வழக்கை திசை திருப்பும் நோக்கில் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பொய் வழக்கு, இதை மக்கள் நம்பத் தயாராக இல்லை." என்றார். 

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...