மழை நீரில் சிக்கிய முதியவரை மீட்டு மறுவாழ்வு அளித்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை

கோவை: கோவையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் சிக்கிய ஆதரவற்ற முதியவரை மீட்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், அவருக்கு மறுவாழ்வு அளித்தனர்.

கோவை: கோவையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரில் சிக்கிய ஆதரவற்ற முதியவரை மீட்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், அவருக்கு மறுவாழ்வு அளித்தனர்.



மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையால், தாழ்வான மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், கோவை மத்திய ரயில்நிலையம் லங்கா கார்னர் பாலத்தின் அடியில் குளம் போல நீர் தேங்கிக் கிடந்தது. அதில், ஒரு வயதான ஆதரவற்ற நடக்க முடியாத முதியவர் அமர்ந்திருந்தார். பெருமளவு தண்ணீர் சூழ்ந்ததால், தண்ணீருக்குள் மாட்டிக் கொண்ட முதியவரால் வெளியே வர முடியவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஏராளமானோர் வேடிக்கை மட்டுமே பார்த்துச் சென்றனர்.



இந்த நிலையில், தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை, ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் பத்திரமாக மீட்டனர். பின்னர், முதியவர் ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த முதியவருக்குத் தேவையான முதலுதவிகள் அளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறார். ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் இந்த செயலை, ஏராளமான பொதுமக்கள் வாழ்த்தி வருகின்றனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...