கேரளாவில் முதல் முறையாக நடைபெற்ற திருநம்பி - திருநங்கை திருமணம்

திருவனந்தபுரம் : கேரளாவில் முதன் முறையாக சட்டப்படி திருநம்பி - திருநங்கை திருமணம் செய்துகொண்டனர்.

திருவனந்தபுரம் : கேரளாவில் முதன் முறையாக சட்டப்படி திருநம்பி - திருநங்கை திருமணம் செய்துகொண்டனர். 

வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது கபீர். இவரது மனைவி ‌ஷனிபா. இவர்களின் மகள் இஷான். திருநம்பியான இஷான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆபரே‌ஷன் மூலம் ஆணாக மாறினார். இதுபோல திருவனந்தபுரம் பாட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன்-உஷா தம்பதியின் மகன் சூர்யா. திருநங்கையான இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் சாதாரண மனிதர்களை போல திருமண வாழ்க்கையில் நுழைய விரும்பினர். இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தனர். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

பெற்றோர் சம்மதம் கிடைத்ததும் இஷான்-சூர்யா இருவரும் திருமணத்தை கோலாகலமாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி, இவர்களின் திருமணம் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள மன்னம் கிளப் அரங்கில் நேற்று நடைபெற்றது. 

கேரளாவில் இதுபோன்ற திருமணம் முதல் முறையாக நடைபெற்றதால் அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மேயர் வி.கே. பிரசாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.பி. சீமா உள்ளிட்ட பிரமுகர்களும், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...