கோவையில் சுமார் ரூ. 4 கோடியே 91 லட்சம் மதிப்பில் சிறப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை: கோவை மாநகராட்சியில் ரூ. 4 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை: கோவை மாநகராட்சியில் ரூ. 4 கோடியே 91 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

மாநகராட்சியின் 16, 18, 19 மற்றும் 20 வார்டுகளில் பேருந்து திருப்பு முனையம், ஆய்வாளர் அலுவலகம், பூங்கா, அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள் என மொத்தம் ரூ. 4 கோடியே 91 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க. விஜயகார்த்திகேயன், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் ப. காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- கோவை மாநகராட்சிப் பகுதியில் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டம் ரூ. 108 கோடி மதிப்பில் சிறப்பாக செயல்பாட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாநகராட்சிப் பகுதியில் சாலைகள், பாலங்கள், மாணவர்களுக்கான விளையாட்டு மற்றும் நடைபயிற்சிக்கான பூங்காக்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.



மேலும், வடவள்ளியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி புதிய பேருந்து திருப்பு முனையம் ரூ. 2 கோடியே 97 லட்சம் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது, என்றார்.



Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...