மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டும் வனத்திற்கு திரும்பிய காட்டு யானை

கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யானை, கால்நடை மருத்துவக் குழுவினரின் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

கோவை: கோவை மாவட்டம் நரசிபுரம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் படுகாயமடைந்த காட்டு யானை, கால்நடை மருத்துவக் குழுவினரின் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

நரசிபுரம் வனப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க நாட்டுவெடிகுண்டு வைக்கப்பட்டி வழக்கம். அதன்படி தோட்டங்களில் சட்டவிரோதமாக விவசாயிகள் நாட்டுவெடிகுண்டுகள் வைத்துள்ளனர். இதையடுத்து, எதிர்பாராதவிதமாக நாட்டு வெடிகுண்டை கடித்ததில், சுமார் 55 வயதுடைய காட்டு யானையின் வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துடன் சுற்றித்திருந்த அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நரசிபுரம் அருகே சுந்தராவயல் பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை நேற்று மாலை மயங்கி விழுந்தது.

இதைத் தொடர்ந்து, வனக் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், சத்துப் பொருட்களான குளுகோஸ், பசுந் தீவனங்கள் உள்ளிட்டவைக் கொடுக்கப்பட்டு, ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் யானை தூக்கி நிறுத்த முயற்சி செய்யப்பட்டது. இதனால், உடல்நலம் தேறிய காட்டு யானை, மெதுவாகக் கால்களை தரையில் ஊன்றி வனப்பகுதிக்குள் மீண்டும் சென்றது. இது குறித்து மருத்துவக் குழுவைச் சேர்ந்த என்.எஸ்., மனோகரன் கூறுகையில், "பொதுவாக பிற காட்டு யானைகளைப் போலவே, இந்த யானையும் குடல் புழுவால் பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.



இதனிடையே, உடல்நலம் பாதித்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் மகிழ்ச்சியடைந்த வனத்துறையினர், சிகிச்சைப் பெற்ற யானை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.



Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...