திருப்பூர்: தங்கம் வாங்கித் தருவதாக கூறி தம்பதியரிடம் மூன்று லட்சம் அளவில் மோசடி செய்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மீது புகார் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேஷ் - ரேவதி தம்பதியினர். இவர்கள் ஐம்பொன் நகைகளை விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரம் நிமித்தமாக இவர்கள் நாளிதழில் விளம்பரம் செய்தனர். விளம்பரத்தைப் பார்த்து அவர்களை தொடர்பு கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய தம்பதியினர் ரூ 2,95,000 அவரிடம் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, தங்கம் கேட்ட தம்பதியினருக்கு முறையாக பதில் கூறாத சதீஷ்குமார், ஒரு கட்டத்தில் அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த தம்பதியினர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடமும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், உடனடியாக சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகேஷ் - ரேவதி தம்பதியினர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.