எச். ராஜாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை

கோவை: அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பரப்பினால் தமிழகத்தில் நடமாட முடியாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை: அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பரப்பினால் தமிழகத்தில் நடமாட முடியாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வரும் 23-ம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வடகோவை பகுதியில் உள்ள தி.மு.க.,வின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்துள்ள எச். ராஜாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தி.மு.க.,வின் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எச். ராஜா தொடர்ந்து இதுபோன்ற அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும், தி.மு.க., தொடர்பாகவும் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை உருவாகும். சட்ட ரீதியாக எச். ராஜா மீது வழக்கு தொடுப்பது குறித்து தி.மு.க. தலைமை முடிவு செய்யும்," என்றார்.

Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...