நாளை நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியைக் காண்பதற்காக சிறப்பு ரயில் மூலமாக புனே சென்ற ரசிகர்களை, தமிழ் வார்த்தைகளின் மூலம் ஹர்பஜன்சிங் வரவேற்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகள் நடத்த ஒருசில அரசியல் கட்சிகளும், திரையுலகினர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், சென்னை போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற ஐ.பி.எல்., நிர்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, நாளை புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டியை காண சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சுமார் 1,000 பேர் சிறப்பு ரயிலில் புனேவுக்கு பயணம் செய்தனர். இதற்காக அவர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் ஏற்பாடு செய்த ரயிலில், சென்னை அணியின் ரசிகர்கள் மஞ்சள் உடையுடன் ரயிலில் சென்றுள்ளனர்.
இதனிடையே, போட்டியைக் காண பலநூறு மடங்கு மைல்கள் தாண்டி வரும் ரசிகர்களை, சென்னை அணியின் வீரர் ஹர்பஜன்சிங் வழக்கம் போல தமிழில் டுவிட் செய்து வரவேற்றுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை. அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்..!. உங்கள் அன்புக்கு நானடிமை..!. நீங்க வேற லெவல் மாஸ் யா... அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்," எனக் குறிப்பிட்டுள்ளார்.