விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த வரும் என் தமிழினம்: ஹர்பஜனின் கலக்கல் டுவிட்

நாளை நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியைக் காண்பதற்காக சிறப்பு ரயில் மூலமாக புனே சென்ற ரசிகர்களை, தமிழ் வார்த்தைகளின் மூலம் ஹர்பஜன்சிங் வரவேற்றார்.

நாளை நடைபெறவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியைக் காண்பதற்காக சிறப்பு ரயில் மூலமாக புனே சென்ற ரசிகர்களை, தமிழ் வார்த்தைகளின் மூலம் ஹர்பஜன்சிங் வரவேற்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில், சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகள் நடத்த ஒருசில அரசியல் கட்சிகளும், திரையுலகினர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால், சென்னை போட்டிகளை புனே மைதானத்திற்கு மாற்ற ஐ.பி.எல்., நிர்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, நாளை புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டியை காண  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சுமார் 1,000 பேர் சிறப்பு ரயிலில் புனேவுக்கு பயணம் செய்தனர். இதற்காக அவர்கள் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை அணி ரசிகர்கள் மன்றம் ஏற்பாடு செய்த ரயிலில், சென்னை அணியின் ரசிகர்கள் மஞ்சள் உடையுடன் ரயிலில் சென்றுள்ளனர்.

இதனிடையே, போட்டியைக் காண பலநூறு மடங்கு மைல்கள் தாண்டி வரும் ரசிகர்களை, சென்னை அணியின் வீரர் ஹர்பஜன்சிங் வழக்கம் போல தமிழில் டுவிட் செய்து வரவேற்றுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை. அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்..!. உங்கள் அன்புக்கு நானடிமை..!. நீங்க வேற லெவல் மாஸ் யா... அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...