கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியின் அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குட்டைபோல் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ப்ரூக் பாண்ட் சாலையை ஒட்டி அமைந்துள்ள சாஸ்திரி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இன்று அதிகாலை முதல் கழிவு நீர் வெளியேறிவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதான சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்வோர் சாலையை கடப்பதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இந்த கழிவுநீர் குட்டையை வாகனங்கள் மெதுவாக கடந்து வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.