காவிரி மேலாண்மை வாரியம்: கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்தும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கோவை உக்கடம் பகுதி மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இதனால் இன்று மீன் மார்கெட்டில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. மீன் வியாபாரிகளின் இந்த போராட்டம் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து விற்பனைக்கு வந்த மீன்கள் வீணானதுடன், வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்

மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே நேற்று நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். மேலும், காவிரிக்காக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதனை சிதைக்கும் விதமாக நடத்தப்படும் ஜ.பி.எல் போட்டி தடைக்கு விதிக்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



Newsletter

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...